No results found

    பிளஸ்-2 தேர்வு: மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடம்


    தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகின. விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 10 ஆயிரத்து 465 மாணவர்களும், 11 ஆயிரத்து 843 மாணவிகளும் தேர்வெழுதினர். இன்று வெளியான தேர்வு முடிவில் 10 ஆயிரத்து 135 மாணவர்களும், 11 ஆயிரத்து 693 மாணவிகளும் என மொத்தம் 21 ஆயிரத்து 828 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 96.85 ஆகும். மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 98.73 சதவீதம் ஆகும். மொத்த சதவீதம் 97.85 ஆகும். மாநிலத்திலேயே மாவட்ட அளவில் பிளஸ்-2 தேர்வில் அதிக தேர்ச்சி சதவீதம் பெற்று முதன்மை மாவட்டமாக விருதுநகர் திகழ்கிறது. கடந்த 25 ஆண்டுகளாக பிளஸ்-2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பெற்று வந்தது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக முதலிடத்தை இழந்த விருதுநகர் மாவட்டம் தற்போது மீண்டும் அதிகளில் தேர்ச்சி விகித்தை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 97.27 ஆகும்.

    Previous Next

    نموذج الاتصال