No results found

    வேலூர் மாநகராட்சி ஊழியர்களுக்கு இலவச சிகிச்சை


    வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி உத்தரவின் பேரில் விருதம்பட்டியில் உள்ள வார்டு அலுவலகத்தில் இன்று காலை மருத்துவ முகாம் நடைபெற்றது. மாநகராட்சியில் வேலை செய்யும் நிரந்தர ஊழியர்கள், தொகுப்பூதிய ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், திடக்கழிவு திட்ட மேலாண்மை ஊழியர்கள், டெங்கு கொசு தடுப்பு பணி ஊழியர்கள் 400-க்கும் மேற்பட்டவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். மாநகராட்சி ஊழியர்களுக்கு ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனை, சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனை செய்து இலவசமாக மருந்து, மாத்திரைகளை வழங்கினர். முகாமில் 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Previous Next

    نموذج الاتصال