தென்காசி மாவட்டம் கடையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். இக்கோவில் அகஸ்தியர் தேரையர் போன்ற சித்தர்களால் வழிபடப்பட்ட பெருமை உடையதாகும். இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் விளையாட்டை மறந்து செல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் நிலையில் 90-ம் ஆண்டுகளில் குழந்தைகள் விளையாடிய விளையாட்டுகளை மீண்டும் விளையாடும் வண்ணம் பம்பரம் விளையாடுதல், கோலி குண்டு விளையாடுதல், கிட்டிபுல் என்ற செல்லாங்குச்சி விளையாடு தல், பலூன் உடைத்தல், பூப்பறிக்க வரீங்களா என்ற பெண்கள் விளையாட்டு போன்ற பழைமையான மறந்து போன விளை யாட்டுகளை விளையாடினர். மேலும் தேன்மிட்டாய், குருவி ரொட்டி, ஆரஞ்சு வில்லை, கடலை மிட்டாய் போன்ற மறந்து போன பண்டங்களை குழந்தைகளின் விளை யாட்டின் இடைவெளியில் கொடுத்து கிட்டத்தட்ட 1990-ம் ஆண்டுகளில் நடந்த நிகழ்ச்சிகளை போன்றே தோரணமலை பக்தர் குழு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
மேலும் கடையம் வேல்முருகன் கராத்தே பள்ளி சார்பில் பல்வேறு பாரம்பரிய தற்காப்பு கலை சாகசங்கள் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவி யர்களுக்கு சான்றிதழ் வழங் கப்பட்டது. சான்றிதழ்களை பராசக்தி கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியை கயற் கன்னி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை பால்த்தாய் ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ்கள் வழங்கினர். வந்திருந்த அனை வருக்கும் காலை முதல் மாலை வரை அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தோரண மலை முருகன் கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.