No results found

    விஷச்சாராய விவகாரம்- ஆளுநரை சந்தித்து மனு அளிக்க அதிமுக முடிவு


    விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் பெருக்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் சாராயம் அருந்திய 22 பேர் பலியாகி உள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய வேட்டை நடத்தி கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பலை அதிரடியாக கைது செய்து வருகின்றனர். மேலும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. சாராயத்தை ஒழிக்க தவறிய குற்றத்துக்காக போலீஸ் அதிகாரிகள் மீது பணியிடை நீக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, செங்கல்பட்டு, விழுப்புரத்தில் விஷச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி விரிவான அறிக்கை கேட்டுள்ளார். இந்நிலையில், விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க அதிமுக முடிவு செய்துள்ளது. நேற்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال