No results found

    திருவள்ளூர்-திருப்பதி சாலையை விரிவுப்படுத்த வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை


    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தையும், ஆந்திராவையும் இணைக்கும் நெடுஞ்சாலையாக எண். என்.எச். 205 விளங்குகிறது. இதில் தினம்தோறும் சென்னையில் இருந்து திருப்பதிக்கு பல்லாயிரகணக்கானோர் பயணிக்கின்றனர். தமிழகத்தை சேர்ந்த திருவள்ளூரில் இருந்து திருத்தணி வழியாக 2013-ம் ஆண்டிலிருந்து இருவழிப் பாதையாகவே விளங்கி வருகிறது. இந்த சாலையில் நடுவில் தடுப்பு சுவர் இல்லாமல் வாகன ஓட்டிகள், எதிர்நோக்கி வரும் வாகனங்களால் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனால் வாகன விபத்துகள் ஏற்பட மிகுந்த வாய்ப்புள்ளது. இந்த சாலை 32 கிலோ மீட்டர் தூரமே உள்ளது. இவற்றை நான்கு வழிப் பாதையாக விரிவுப்படுத்துவதால் பல்லாயிரக்கணக்கானோர் பயன்பெறுவர். வாகனங்களில் பயணிப்போரின் பாதுகாப்பு கருதி, புத்தூரில் இருந்து திருப்பதி செல்லும் நான்குவழிப் பாதையைப் போல திருவள்ளுரில் இருந்து திருப்பதி செல்லும் சாலையை விரிவுப்படுத்த வேண்டும். இதனால் பாதுகாப்பான பயணம் ஏற்படும். அதோடு பயண நேரமும் குறையும். ஆகவே விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

    Previous Next

    نموذج الاتصال