இன்று சர்வதேச அன்னையர் தினம். இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் கோபாலபுரம் சென்று, தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவருடன் மனைவி துர்காவும் உடன் சென்றிருந்தார். மகன் மு.க.ஸ்டாலினை கண்டதும் தயாளு அம்மாள் சந்தோஷ மிகுதியில் மு.க.ஸ்டாலினின் கன்னத்தில் முத்தமிட்டு மகிழ்ந்தார். அதன் பிறகு சிறிது நேரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருடன் பேசிக் கொண்டிருந்தார். அதன் பிறகு தனது தாயாருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அன்னையர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- உடலுக்குள் இன்னொரு உயிராய் நம்மைச் சுமந்து, உயிருக்கும் மேலாய் அன்பு செலுத்திடும் அன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்! அன்பினால் அவனியை நிறைக்கும் தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் மதிப்போம், நிறைவேற்றுவோம்! இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தமிழ் நியூஸ்
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- _இந்துக்கள்
- _இஸ்லாம்
- _கிறிஸ்துவம்
- _சித்தர்
- _மந்திரங்கள்
- _ஜோதிடம்
- _எண் கணிதம்
- _கோவில்கள்
- பெண்கள் உலகம்
- _கர்ப்ப காலம்
- _பெண்கள் பாதுகாப்பு
- _பெண்கள் மருத்துவம்
- _சமையல் குறிப்பு
- _குழந்தை பாதுகாப்பு
- _வீட்டுப் பராமரிப்பு
- _தோட்டப் பராமரிப்பு
- _செல்லப் பிராணிகள்
- பயமறியான்
- _ஆரோக்கியம்
- _வரலாறு
- _தொழில்நுட்பம்
No results found