No results found

    கள்ளச்சாராய விவகாரம்: விழுப்புரம், செங்கல்பட்டு எஸ்பிக்கள் சஸ்பெண்டு - முக ஸ்டாலின் அதிரடி!


    கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்து இருக்கிறது. மேலும் சிலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 15) நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என்றும், இதனை கண்காணிக்க தவறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்தார். இதோடு கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா மற்றும் செங்கல்பட்டு எஸ்பி பிரதீப் ஆகியோரை பணிநீக்கம் செய்து முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    Previous Next

    نموذج الاتصال