முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மிட்சுபிஷி எலக்ட்ரிக் கார்ப்பரேஷன் மற்றும் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த மிட்சுபிஷி எலக்ட்ரிக் ஏசியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் துணை நிறுவனமான மிட்சு பிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.1,891 கோடி முதலீட்டில் அறைகளுக்கான குளிர்சாதன இயந்திரங்கள் மற்றும் காற்றழுத்தக் கருவிகள் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு கட்டமைக்கப்பட்ட ஊக்கச் சலுகைகள் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு அரசு மற்றும் மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் இடையே மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் இந்நிறுவனத்தில் 2000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும். மேலும், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகா, பெருவயல் கிராமத்தில், மகேந்திரா ஆரிஜின்ஸ்-ல், 52 ஏக்கர் நிலப்பரப்பில் மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன ஆலை அமைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்தின் முதலீடான 1,891 கோடி ரூபாயும் நூறு சதவிகித அந்நிய நேரடி முதலீடு மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது.
குளிர்சாதன எந்திரங்கள் ஆலை அமைப்பதற்கு ஒப்பந்தம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
Google