தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 7 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், 10 மருந்தகங்கள், பணியாளர் கூட்டுறவு சங்கங்கள், காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் 602 கூட்டுறவு நியாய விலை கடைகளில் கியூ ஆர் கோடு மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் நடைமுறையை கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் அறிமுகம் செய்து வைத்தார். இதனால் பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருள்களுக்கு நேரடியாக பணம் வழங்காமல் ஸ்மார்ட் போன் மூலமாக கியூ ஆர் கோடை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இதற்கு வர வேற்பு உள்ளது. இதை தொடர்ந்து 649 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 22 லட்சம் கடன் உதவிகளை கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முக சுந்தரம் வழங்கினார். நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முருகன், காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் இணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரத்தில் 649 பயனாளிகளுக்கு ரூ.5¼ கோடி கடன் உதவி- கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் வழங்கினார்
Google