No results found

    கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு


    ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. நேற்று முன்தினம் இரவு காவேரிப்பாக்கம் பகுதியில் கன மழை பெய்ததால் நெமிலி கொசஸ் தலை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை பாலத்தின் மீது செல்லும் பொது மக்கள் கண்டு ரசித்தனர். இது குறித்து நீர்வளத் துறை உதவி பொறியாளர் சந்திரன் கூறுகையில்:- நெமிலி கொசஸ்தலை ஆற்றில் கட்டப்பட்டுள்ள சைனபுரம், காரியா குடல் தடுப்பணைகள் முழு கொள்ளளவு எட்டியது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளான சயனபுரம், ரெட்டிவலம், கீழ்வெண்பாக்கம், அசநெல்லி குப்பம், கரியாக்குடல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாய பாசனத்திற்கு தேவையான நீர் கிடைக்கும். மேலும் மக்களுக்கு குடிநீர் 6 மாதத்திற்கு தடையின்றி கிடைக்கும் என்று கூறினார்.

    Previous Next

    نموذج الاتصال