No results found

    அரசு மருத்துவமனைக்கு இரும்பு கட்டில் மற்றும் மெத்தை


    ராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் மருத்துவச்சேவையும், கல்விச்சேவையும் பொதுநலச்சேவையும், செய்து வருகின்றது. கீழக்கரை அரசு தாலுகா மருத்துவ மனையில் அவசர காலங்களில் கட்டில் வசதிஇல்லாமல் நோயாளிகள் பெரிதும் அவதி அடைந்து வந்தனர். இது குறித்து தலைமை மருத்துவர் ஜவாஹிர் உசேன் மற்றும் டாக்டர்கள் இஸ்லாமிய கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிமை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். விரைவில் கட்டில் மெத்தை வழங்குவதாக பள்ளியின் தாளாளர் உறுதி அளித்தார்.இந்த நிலையில் ரூ.1லட்சம் மதிப்புள்ள இரும்பு கட்டில் மற்றும் மெத்தைகள் இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் சார்பில் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. அரசு தலைமை மருத்துவர் ஜவாஹிர் உசைன் பெற்றுக்கொண்டார்.

    Previous Next

    نموذج الاتصال