போலீஸ் நிலையங்களில் பெறப்படும் புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் உன்னிப்பாக கண்காணித்து வருவதுடன் வழக்குகள் பற்றிய நிலையையும் உடனுக்குடன் கேட்கிறார். கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி என தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிடுகிறார். குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது உரிய காலத்துக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து உடனடியாக தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கும் உடனுக்குடன் அபராதம் விதிக்கப்படுகிறது. போக்குவரத்தை மீறி வாகனம் ஓட்டினால் அதிகரிக்கப்பட்ட அபராத தொகையை வசூலிக்க உத்தரவிட்டுள்ளார். மது போதையில் வாகனம் ஓட்டு பவர்களுக்கு அதிரடியாக அபராதம் வசூலிக்கப்படுகிறது. விபத்தால் யாரும் உயிரிழக்கக்கூடாது. விபத்து இல்லாத ஆண்டை நோக்கி நமது பயணம் இருக்க வேண்டும் என்று போக்குவரத்து போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளார். எனவே போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போலீசார் மீது குற்றச்சாட்டுகள் எழும் நிலையில் உரிய விசாரணை நடத்தி அவர்கள் குற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு பணிகளையும் உரிய முறையில் திட்ட மிட்டு திறம்பட மேற்கொண்டு வருகிறார். தனது கடும் நடவடிக்கையால் சென்னையில் சட்டம்-ஒழுங்கை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அவருக்கு போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.