No results found

    வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி இருளர், போயர் இன மக்கள் மனு


    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே யுள்ள கூமன்தொட்டி மற்றும் புடுமன்ன தொட்டி ஆகிய 2 கிராமங்களில் வசிக்கும் இருளர் மற்றும் போயர் இனத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன், ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று நேரில் திரண்டு வந்து, உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சண்முகத்திடம், ஒரு கோரிக்கை மனு அளித்தனர், அதில், கூடுமன்தொட்டி மற்றும் புடுமன்ன தொட்டி ஆகிய 2 கிராமங்களிலும், மூதாதையர்களை தொடர்ந்து பல ஆண்டு காலமாக வாழ்ந்து வரும் சுமார் 50 குடும்பங்களுக்கு இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பல முறை மனுக்கள் வழங்கியும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, உதவி கலெக்டர் இதில் தலையிட்டு, எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கேட்டுக ்கொள்ளப்பட்டுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال