No results found

    பரமத்தி வட்டாரத்தில் உள்ளபழங்குடியின விவசாயிகளுக்கு50 சதவீதம் மானியம் வழங்கல்


    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் உள்ள கோதூர், நடந்தை, மேல்சாத்தம்பூர், ராமதேவம் உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள சிறு, குறு, மகளிர், ஆதிதிராவிடர், பழங் குடியினர் விவசாயிகளுக்கு 50 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீதமும், அதிகபட்சமாக ரூ.85 ஆயிரம் என்ற விதத்தில் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது. மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவு சிறு, குறு விவசாயி களுக்கு கூடுதலாக 20 சதவீத மானிய தொகை ஒதுக்கீடு பெற்று அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

    இந்த மானியம் பெற விரும்பும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-22 கிராமங்கள் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள், திருச்செங் கோட்டில் உள்ள வேளாண் மைப் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம். மேலும் விண்ணப்பத் துடன் சிட்டா, அடங்கல், சிறு, குறு விவசாயி சான்றி தழ் மற்றும் சாதி சான்றிதழ் ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். மேற்படி மானியம் முன்னு ரிமை அடிப்படையில் வழங்கப்படும் என பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்த சாமி தெரிவித்துள்ளார்.

    Previous Next

    نموذج الاتصال