No results found

    சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது- அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி


    சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உக்ரைனில் இருந்து தமிழகத்துக்கு திரும்பிய மாணவர்கள் படிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் வேளாண் கல்லூரி பயின்ற மாணவர்கள் எந்தவித தடையும் இல்லாமல் தமிழக அரசால் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. ஆனால் மருத்துவக் கல்லூரி படித்து திரும்பிய மாணவ- மாணவிகளுக்கு அவ்வாறு இல்லை. இங்கு நீட் தேர்வில் இருப்பதால் மத்திய அரசிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளோம். விரைவில் அவர்களும் படிப்பை தொடர ஏற்பாடுகள் செய்யப்படும்.

    வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்ப பதிவு செய்யப்பட்ட 103 பேர் ஏஜெண்டுகளாக உள்ளனர். பதிவு செய்யப்பட்ட ஏஜெண்டுகளை அழைத்து கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படாத ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள் அனுப்பும் பணியில் போலி ஏஜெண்டுகளாக செயல்பட்ட 4 பேர் மீது இதுவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். விஷ சாராய வழக்கில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர் அமைச்சருடன் சேர்ந்து எடுக்கப்பட்ட படத்தை வைத்து விமர்சனம் செய்கிறார்களே என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், திருமண நாள், பிறந்தநாள் போன்றதற்கு வாழ்த்து பெற பலர் வருகிறார்கள். பொது வாழ்வில் நாங்கள் இருக்கிறோம். எங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். அதை வைத்து முடிவு செய்ய முடியாது. சமூக விரோதிகள் தங்கள் இருக்கும் இடத்தை மாற்றிக் கொள்வார்களே தவிர தொழிலை மாற்ற மாட்டார்கள். இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    Previous Next

    نموذج الاتصال