தமிழக அமைச்சரவையில் அதிரடியாக மாற்றங்களை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக கடந்த சில நாட்களாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகி வந்தன. தமிழக அமைச்சர்கள் சிலரது இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும், புதுமுக எம்.எல்.ஏ.க்கள் சிலர் அமைச்சர்களாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியின் மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் புதிதாக யார்-யாரை அமைச்சர்களாக நியமிக்கலாம்? அமைச்சர்களாக இருப்பவர்களில் யாருடைய இலாகாக்களை மாற்றலாம் என்பது பற்றி முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து இன்று மதியம் தி.மு.க. மூத்த அமைச்சரான துரைமுருகன், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசுகிறார். அப்போது அவர் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் பட்டியலை கவர்னரிடம் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?- கவர்னரை சந்திக்கிறார் அமைச்சர் துரைமுருகன்
Google