அதனைத் தொடர்ந்து நாங்குநேரி அருகே பரப்பாடி பகுதியில் நடைபெற்று வரும் நதிநீர் இணைப்பு திட்டத்துக்கான மூன்றாம் நிலை பணியினை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். தொடர்ந்து நதிநீர் இணைப்பு திட்ட பணிகளை விரைவுப் படுத்துவது குறித்து அதிகாரிகளிடம் ஆலோ சனை நடத்தினர். அப்போது அவருடன் சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் கார்த்திகேயன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ். ஆர். ஜெகதீஷ், ஒன்றிய செய லாளர் ஆரோக்கிய எட்வின் உள்பட பலர் கலந்து கொ ண்டனர். அதன் பின்னர் நெல்லை அருகே பொன்னா க்குடி பகுதியில் நதிநீர் இணைப்பு திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது முன்னாள் சபாநாயகரும், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான ஆவுடையப்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கணேஷ் குமார் ஆதித்தன், ஆவின் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் ஜான் ரவீந்தர், மாவட்ட துணை செய லாளர் தமயந்தி மற்றும் நிர்வாகிகள் செல்வ கருணாநிதி, சுடலை கண்ணு, ஜார்ஜ் கோசல், ரகுமான் உள்பட கலந்து கொண்டனர். உற்சாக வரவேற்பு அதனைத் தொடர்ந்து நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையில் செண்டை மேளம் முழங்க நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே அமைச்சர் துரைமுருகனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் மத்திய மாவட்ட தி.மு.க. துணை செயலாளர்கள் விஜிலா சத்தியானந்த், எஸ்.வி.சுரேஷ், மாநகர துணை செயலாளரும், மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவருமான சுதா மூர்த்தி, விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பாளர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, மாணவரணி ஆறுமுகராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு சுற்றுலா மாளி கையில் அமைச்சர் துரை முருகன் ஓய்வெ டுத்தார். பொதுக்கூட்டம் இன்று மாலை டவுன் குளப்பிறை தெருவில் நடைபெற உள்ள தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்ட த்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதனை யொட்டி நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் மாநகர பகுதியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.