No results found

    பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தி வைப்பு: தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வரவேற்பு


    தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் நா.சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி மூப்பின்படி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இந்த நிலையில் தொடக்க கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறையில் தற்போது ஆசிரியர் பொது மாறுதல்-பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நன்றி தெரிவிக்கிறது. தமிழக அரசு இனிவரும் காலங்களில் பணிமூப்புடைய தொடக்க-நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் பதவி உயர்வு உரிமையை பாதுகாக்கும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். எங்களது பிரச்சினைகளுக்கு முழுமையாக தீர்வு கிடைக்கும் வகையில் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடவடிக்கைகளை தொடங்குவதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال