No results found

    கள்ளச்சாராயம் விற்பனை- ஒரே நாளில் 247 வியாபாரிகள் கைது


    விழுப்புரம், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 247 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு 81 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் 202 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 121 பேர் சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 5901 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல், 1106 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் அதிரடி சோதனை தொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال