நாகையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. நகர் மன்ற தலைவரும், தி.மு.க நகரச் செயலாளருமான மாரிமுத்து தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவரும், நாகை மாவட்ட செயலாளருமான கவுதமன், நாகை தொகுதி மேலிட பார்வையாளர் நிரஞ்சன் துறை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் அ.தி.மு.க முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் ஹாஜி சுல்தான் அப்துல் காதர், முன்னாள் மகளிர் அணி செயலாளர் அஞ்சம்மாள் பரமசிவம் மற்றும் அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 200 -க்கும் மேற்பட்டோர் தங்களை தி.மு.க.வில் இணைத்து கொண்டனர். அவர்களை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன், சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் அவர் பேசியதாவது:- தமிழகம் தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழ்வதால் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திற்கும் இல்லாத அளவிற்கு பாதுகாப்பாக உள்ளதால் உலக முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தொழிற்சாலைகளை தொடங்கி வருவது தமிழக முதலமைச்சருக்கு கிடைத்த வெற்றி. தமிழகத்தில் மட்டுமே அனைவரும் ஜாதி மதங்களைக் கடந்து சகோதரர்களாக பழகும் மாண்பு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழ் நியூஸ்
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- _இந்துக்கள்
- _இஸ்லாம்
- _கிறிஸ்துவம்
- _சித்தர்
- _மந்திரங்கள்
- _ஜோதிடம்
- _எண் கணிதம்
- _கோவில்கள்
- பெண்கள் உலகம்
- _கர்ப்ப காலம்
- _பெண்கள் பாதுகாப்பு
- _பெண்கள் மருத்துவம்
- _சமையல் குறிப்பு
- _குழந்தை பாதுகாப்பு
- _வீட்டுப் பராமரிப்பு
- _தோட்டப் பராமரிப்பு
- _செல்லப் பிராணிகள்
- பயமறியான்
- _ஆரோக்கியம்
- _வரலாறு
- _தொழில்நுட்பம்
No results found