No results found

    அ.தி.மு.க.வின் வலிமை பா.ஜ.க.விற்கு விரைவில் தெரியவரும்- முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் பேட்டி


    விருதுநகரில் முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:- ஓ.பன்னீர்செல்வம் பூஜ்ஜியம். அவர் சந்தித்துள்ள டி.டி.வி.தினகரனும் பூஜ்ஜியம். 2 பூஜ்ஜியங்களும் ஒன்று சேர்ந்தால் பலனில்லை. அ.ம.மு.க. கூடாரம் காலியாகிவிட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. வலிமை பெற்றுள்ளது. கர்நாடக தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைந்துள்ளது. அ.தி.மு.க.வின் வலிமை இனிமேல் தான் பா.ஜ.க.வுக்கு தெரியவரும். மத்திய அரசு தி.மு.க. அரசு மீது 356-வது சட்ட பிரிவை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. கர்நாடக தேர்தலுக்கு பின் இந்த நடவடிக்கை விரைவுபடுத்தப்படும். விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்காபுரத்தில் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி அதற்கான இடத்தை எடப்பாடி பழனிசாமி ஒதுக்கீடு செய்தார். தற்போது அந்த திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால் அந்த திட்டத்தை தாங்கள் கொண்டு வந்ததாக தி.மு.க. அரசு பொய் பிரசாரம் செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    Previous Next

    نموذج الاتصال