மேலும் கடந்த ஆண்டு ஒப்பந்ததாரர்கள் போட்ட வழக்கில் சீரமைப்பு பணி களை செய்யும்போது ஒப்பந்த தாரர்கள் ஊழியர்களுக்கும், எந்திரங்களுக்கும் தக்க போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஒரு ஆணையையும் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதன் அடிப்படையில் கடந்த 1-ந் தேதி முதல் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. எனினும் கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் முழுமையாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி கீழ்பவானி ஆயகட்டு நில உரிமையாளர்கள் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வலியுறுத்த ப்பட்டது. இல்லையென்றால் இன்று முதல் கோண வாய்க்கால் பகுதியில் உள்ள பொதுப்ப ணித்துறை அலுவலகம் முன்பு காலவரையற்ற உண்ணா விரத போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதே நாளில் எதிர் தரப்பை சேர்ந்த விவசாய சங்கங்களும் பொதுப்ப ணித்துறை அலுவலகத்தில் வந்து மனு கொடுப்பதாக அறிவித்திருந்தனர். இதனால் இன்று பொது பணித்துறை அலுவலகம் முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டி ருந்தது. இந்த நிலையில் இன்று காலை கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமை யாளர்கள் சங்கத்தின் தலைவர் பெரியசாமி, செயலாளர் பொன்னையன், பொருளாளர் சிவ சபாபதி, தமிழக விவசாய சங்கத்தின் செயலாளர் சுப்பு ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவ லகத்திற்கு உண்ணாவிரத போராட்டத்திற்காக திரண்டு வந்தனர்.
உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் கீழ்பவானி வாய்க்கால்களில் முழுமையான சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம். பழனிச்சாமி ஆகியோரும் உடன் இருந்தனர் பின்னர் விவசாய சங்கத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டனர்.அதன்படி விவசாய சங்க பிரதிநிதிகளுடன் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆர்.எம்.பழனிசாமியும் உடன் பேச்சுவார்த்தைக்கு சென்றனர். செயற் பொறி யாளர் கண்ணன் தலைமையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சீரமைப்பு பணிகள் எங்கெங்கு நடைபெறுகிறது என்ற விவரத்தை செயற்பொ றியாளர் அவர்களிடம் தெரிவித்தார். இதனை விவசாய சங்க பிரதி நிதிகளும் ஏற்றுக் கொண்டனர். இதனை அடுத்து உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.