No results found

    அரசு பள்ளிகளுக்கு 5 கோடி பாடப்புத்தகம் வினியோகம்- பள்ளி திறக்கும் முதல் நாளில் வழங்க கல்வித்துறை ஏற்பாடு


    அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாடப்புத்தகம் ஒவ்வொரு ஆண்டும் இலவசமாக வழங்கப்படுகிறது. 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் மட்டுமின்றி, பென்சில், ஜாமின்ரி பாக்ஸ், கிரையன்ஸ், சீருடை, பள்ளி பை, ஷீ உள்ளிட்ட பொருட்களும் இலவசமாக கொடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு பள்ளி திறக்கப்படும் முதல் நாளே மாணவர்கள் கையில் பாட புத்தகம் கிடைக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களுக்கும் பாடபுத்தகங்கள் அனுப்பப்பட்டுவிட்டன. 2023-24 கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகம் 5 கோடியே 16 லட்சம் அச்சிடப்பட்டுள்ளது. அதனை அனைத்து கல்வி மாவட்டத்துக்கும் அனுப்பும் பணி முழுமை அடைந்தன. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கட்டுப்பாட்டில் அவை குடோன்களில் இருந்து அரசு பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது. தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது. ஒரு சில நாட்களுக்குள் இந்த பணி நிறைவடைந்துவிடும். பள்ளி ஜூன் முதல் வாரத்தில் திறக்கும்போது அன்றைய தினமே பாட புத்தகங்கள் வழங்க கல்வித் துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

    Previous Next

    نموذج الاتصال