No results found

    தஞ்சையில் ஆர்ப்பாட்டம்


    இந்திய மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய அகில இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரை கைது செய்ய வலியுறுத்தியும், வீராங்க னைகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் ஏ.ஐ.டி.யு.சி தேசிய தொழிற்சங்கம் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. அதன்படி தஞ்சை மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி சார்பில் பழைய பஸ் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் தில்லைவனம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், மாவட்ட பொருளாளர்கோ விந்தராஜன், வி.தொ.ச மூத்த தலைவர் கிருஷ்ணன், மின்வாரிய சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர் பொன்.தங்கவேல், டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர்கோடீஸ்வரன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் அப்பாத்துரை, கட்டுமான சங்க மாவட்டத் துணைத் தலைவர்கள் செல்வம், சிகப்பியம்மாள், ஆசிரியர் ஓய்வு சுந்தரமூர்த்தி, சமூக ஆர்வலர் ஆலம்கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Previous Next

    نموذج الاتصال