இந்த தடுப்புச்சுவர் பெரிய அலைகளை தாங்கும் வகையில் உறுதியாக அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. தற்போது 2 ஆயிரம் கான்கிரீட் கற்கள் கொண்டு வரப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் 3 ஆயிரம் கான்கிரீட் கற்கள் கொண்டு வரப்படும். இது கூவத்தை சுத்தப்படுத்தும் திட்டமாகும். குறைந்த அளவிலான அலையின்போது கூவம் ஆற்றின் தண்ணீர் சீராக கடலில் கலக்கும். பெரிய அலைகளின் போது கடலில் உள்ள நீர் கூவத்தில் பாயும். இதனால் கூவம் ஆற்றின் நீர் இயற்கையாகவே சுத்தமாகிறது. பெரிய அலைகள் ஒன் றன்பின் ஒன்றாக ஏற்பட்டு கரையை அடையும்போது இந்த தடுப்புச்சுவர் அலையின் வேகத்தை குறைக்கின் றன. இதனால் கரையில் மண் அரிப்பு ஏற்படாது.
ஏற்கனவே கடலும் ஆறும் சந்திக்கும் முகத்துவாரத்தில் ஆற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மணலை கொண்டு வருகிறது. இதனால் எந்திரத்தை பயன்படுத்தி மண் மற்றும் சேற்றை அகற்ற வேண்டும். அப்போதுதான் கூவம் தண்ணீர் கடலுக்குள் செல்லும். இந்த தடுப்பு சுவர் அமைப்பதால் கடலில் இருந்து வரும் மண்ணின் அளவு குறையும். இதனால் கூவத்தில் உள்ள தண்ணீர் தடையின்றி கடலில் கலக்கிறது. பொதுப்பணித்துறை, சென்னை குடிநீர் வாரியம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த கட்டமைப்பை மேற்கொண்டு வருகிறது. 3 முதல் 4 மாதங்களில் இந்த பணிகள் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.