No results found

    பரமத்திவேலூரில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள கரப்பாளையத்தை சேர்ந்த பட்டதாரி இளம்பெண் நித்யா (வயது 28) என்பவர், கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளை கைது செய்யப்பட வேண்டும். இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பரமத்திவேலூர் காமராஜர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக் குழு செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். வட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணன் முன்னிலை வைத்தார். வட்டக் குழு உறுப்பினர் செல்வராணி வரவேற்று பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கமணி கண்டன உரையாற்றினார். மாவட்டக் குழு செயலாளர் கந்தசாமி நிறைவுரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில், படுகொலை செய்யப்பட்ட நித்யா வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உட்படுத்தி உண்மையான குற்றவாளிகள் கைது செய்ய வேண்டும். நேர்மையற்று முறையில் விசாரணையில் ஈடுபட்டுள்ள உள்ளூர் காவல்துறையில் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தாயின்றி தவிக்கும், நித்யாவின் 2 பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு தமிழக அரசு உதவிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தினர். இதில், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பொறுப் பாளர்கள் கருப்பையா, கந்தசாமி, தனசேகரன், ராமச்சந்திரன், பாலசுப் பிரமணியம், குழந்தைவேல் உட்பட 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் கிளைச்செயலாளர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.

    Previous Next

    نموذج الاتصال