No results found

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு கல்லூரி மாணவர்களுக்கு பணி நியமன ஆணை


    பொன்னேரி உலகநாத அரசினர் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் முதல் கட்ட பயிற்சிக்காக, வங்கி, நிதி, சேவைகள் மற்றும் காப்பீடு (BFSI) ஆகிய பாடங்களை கல்லூரியில் கணினி சாராத மூன்றாமாண்டு பயிலும் 122 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களுக்கு செப்டம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை பயிற்சியளிக்கப்பட்டது. மாதிரி தேர்வு ஏப்ரல் 2023ல் நடத்தப்பட்டு (IIFL) சமஸ்தா, புளுசிப், பேங்க்பஸார் மற்றும் முத்தூட் நிதி நிறுவனங்களில் மாதம் ரூ.16000த்தில் பணிபுரிய 78 மாணவர்களுக்கு கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர் மா.திருச்சேரன் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகள் பணி நியமன ஆணைகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் ப. மரியதாஸ், வணிக கூட்டுறவியல் தலைவர் தி.கிருபாநந்தன், பொருளியல் துறைத்தலைவர் முனைவர் பா.எழிலரசு, வரலாற்று துறைத்தலைவர் முனைவர் சு.ஜெகஜீவன்ராம், உடற்கல்வி இயக்குனர் முனைவர் சுருளி முருகாநந்தன் மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியை சண்முகப்பிரியா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியினை திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் மரிய இராயப்பன் ஏற்பாடு செய்திருந்தார்.

    Previous Next

    نموذج الاتصال