No results found

    மதுரை மீனாட்சி அம்மன் அருளால் 2 முறை எம்.எல்.ஏ. ஆகியுள்ளேன்- நடிகை ரோஜா


    ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரும், நகரி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அம்மன், சுவாமி சன்னதிகளுக்கு சென்று ரோஜா வழிபட்டார். பின்னர் கோவிலை சுற்றி பார்த்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் அவரை பார்க்க திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாமி தரிசனம் செய்து விட்டு அம்மன் சன்னதி வழியாக வெளியே வந்த ரோஜா நிருபர்களிடம் கூறுகையில், மதுரை மீனாட்சி அம்மன் அருளால் 2 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். கடந்த 2013-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது கோவிலுக்கு வந்து மீனாட்சி அம்மனை தரிசனம் செய்துள்ளேன். சொக்கரையும் கும்பிட்டு விட்டு புதிய உத்வேகத்தோடு மக்களுக்கு நல்லது செய்ய சந்தோஷமாக செல்கிறேன் என்றார். அவரிடம் தொடர்ந்து நிருபர்கள் அரசியல் தொடர்பாக கேள்வி கேட்டபோது, பதில் அளிக்க மறுத்து விட்டார்.

    Previous Next

    نموذج الاتصال