No results found

    பாலினம் பிரிக்கப்பட்ட செயற்கை கருவூட்டல் திட்டம்


    புதுவை மாநிலத்தில் ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டம் மத்திய அரசின் நிதியளிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியான பாலினம் பிரிக்கப்பட்ட செயற்கை முறை கருவூட்டல் திட்டம், புதுவை மாநிலத்தில் கால்நடை விவசாயிகளிடம் அறிமுகப்ப டுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து கால்நடை விவசாயிகளுக்கு ஒருநாள் கருத்தரங்கு கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. திட்டத்தின் தொடக்க விழா மற்றும் கருத்தரங்கம் இன்று ஆரியப்பாளையம், வில்லியனூர் புறவழிச்சாலையில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் நடைபெற்றது.

    திட்டத்தினை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். அரசு செயலர் குமார் முன்னிலை வகித்தார். இயக்குனர் டாக்டர் லதா மங்கேஷ்கர் வரவேற்றார். இந்த திட்டத்தில் கறவைமாடுகள் 90 சதவீதம் பெண் கன்றுகள் மட்டுமே ஈனும் வாய்ப்பு ஏற்படும். இதனால் புதுவையில் பால்உற்பத்தி பெருகுவதுடன் கால்நடை விவசாயிகளின் வருமா னமும் கணிசமாக உயரும். விவசாயிகள் திட்டத்தினை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் ராஜகணபதி, காந்தராஜ், உமாமகேஸ்வரி ஆகியோர் பாலினம் பிரிக்கப்பட்ட செயற்கை முறை கருவூட்டல் நன்மைகள், கன்று பராமரிப்பு முறைகள், தீவன மேலாண்மை, சினைப்பருவம், பேறுகால மேலாண்மை குறித்து விளக்கினர். கருத்தரங்கில் பங்கேற்ற விவசாயிகளுக்கு கறவை மாடுகளுக்கான தாது உப்பு கலவையினை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வழங்கினார். விழா ஏற்பாடுகளை இணை இயக்குநர் செந்தில் குமார் மற்றும் துறை அதிகாரிகள், ஊழியர்கள் செய்திருந்தனர்.

    Previous Next

    نموذج الاتصال