இதில், எல்லாபுரம் ஒன்றிய முன்னாள் துணைப் பெருந்தலைவர் ஏ.வி.ராமமூர்த்தி, கும்மிடிப்பூண்டி சப்-ரிஜிஸ்டார் எஸ்.ஏ.சீனிவாசன், எல்லாபுரம் ஒன்றிய துணை பெருந்தலைவர் வக்கீல் கே.சுரேஷ், ஊத்துக்கோட்டை வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆ.சீனிவாசன், வட்டாட்சியர் கே.நடராஜன், ஊத்துக்கோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மு.தமிழ்ச்செல்வன், பெரியபாளையம் வியாபாரிகள் சங்கத் தலைவர் பா.தனசேகர், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் பி.என்.ரவிச்சந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இ.ராஜா, எல்லாபுரம் வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் வி.மூர்த்தி,தலைமை ஆசிரியர்கள் பி.ஹேமலதா,பி.சகிலா, ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி வெஸ்லி, ரிட்டையர்டு அக்ரி ஏசுபாதம், பேன்சி ஸ்டோர் சூரியபிரகாஷ்,நேதாஜி மக்கள்மன்ற நிறுவனத் தலைவர் தேவராஜ்,பவுன் புரோக்கர் சுரேந்திரன், வக்கீல் ஆர்.எல்.சுரேஷ், முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு இப்பள்ளியின் சிறப்புகள் குறித்தும், பள்ளியின் மாணவப்பருவம் குறித்தும் தங்களது அனுபவங்களை எடுத்துக்கூறி கல்வி ஒன்றே மனிதனை உயர்ந்த நிலைக்கு கொண்டு வரும் என்பதனை எடுத்துக்கூறினர்.
மேலும், பள்ளியின் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்ய உள்ளதையும், ரூ.10 லட்சம் செலவில் சுற்று சுவர் கட்ட உள்ளதையும், மாணவர்களின் படிப்புக்கும், முன்னேற்றத்திற்கும் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய உள்ளதையும் எடுத்துக் கூறினர். முன்னதாக பள்ளி மாணவர்களின் பரதநாட்டியம்,தம்பாட்டம், கோவலன் கண்ணகி காவியம், சிலம்பம், கராத்தே உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முடிவில், பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத்தலைவர் எல்.சினு, துணைச் செயலாளர் ஏ.ராஜமுகமது, துணைச்செயலாளர் எல்.கீதாவேலு ஆகியோர் நன்றி கூறினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளும், விழா குழுவினர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.