No results found

    தேனி: 4 மணி நேரம் நீரில் மிதந்து 6 வயது சிறுமி கின்னஸ் சாதனை


    தேனி அருகே பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவருடைய மகள் டைஷா (வயது6). இவர் உலக கின்னஸ் சாதனைக்காக நீரில் மிதக்கும் சாதனை முயற்சியை மேற்கொ ண்டார். இம்முயற்சி தேனி மாவட்ட விளையாட்டு மைய வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வை தேனி மாவட்ட விளையாட்டு கழக தலைவர் வக்கீல் முத்து ராமலிங்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சாதனை நிகழ்ச்சிக்கு யுனிவர்சல் ரெக்கார்ட்ஸ் போரம் கின்னஸ் சுனில் ஜோசப், அனீஸ் ஜெபஸ்டின் ஆகியோர் மேற்பார்வை யாளராக இருந்தனர். இந்த நிகழ்வில் தேனி வெளிச்சம் அறக்கட்டளை நிர்வாகி நாணயம் சிதம்பரம், நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் உள்பட சிறுமியின் பெற்றோ ர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து நீரில் மிதக்கும் முயற்சியை மேற்கொண்ட சிறுமி டைஷா 4 மணி நேரம் 18 நிமிடம் நீரில் மிதந்து உலக கின்னஸ் சாதனை படைத்தார். இதனை அடுத்து யுனிவர்சல் ரெக்கார்ட்ஸ் போரம் சாதனை படைத்த சிறுமிக்கு மெடல் மற்றும் கின்னஸ் சாதனையாளர் விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் இவர் கடந்த 1½ ஆண்டுகளாக நீச்சல் பயிற்சி எடுத்து வந்துள்ளார். இந்த சிறுமி மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி என மெடல்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Previous Next

    نموذج الاتصال