No results found

    தருமபுரியில் நீட் தேர்வுக்கு டவுசருடன் தேர்வு எழுத வந்த 2 மாணவர்கள்


    தருமபுரி மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் 5,437 மாணவ மாணவிகள் மருத்துவ நீட் நுழைவுத் தேர்வு எழுதினர். நேற்று காலை முதலே மாணவ மாணவிகள் தேர்வு மையத்திற்கு முன்பு குவிந்தனர். சரியாக 11:30 மணி முதல் மாணவர்களுக்கு தேர்வு நுழைவு சீட்டில் குறிப்பிட்டவாறு சோதனைக்குப் பிறகு தோ்வு மையத்திற்கு உள்ளே அனுமதித்தனர். தருமபுரி எஸ்.வி ரோடு சாலையில் உள்ள 2 தேர்வு மையங்களில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள் 2 போ் டீசர்ட் மட்டும் டவுசர் (இரவு அணியும் உடை) அணிந்து நீட் தேர்வு எழுத வந்தனர். அவர்களை சோதனை செய்து அதிகாரிகள் முழு பேண்ட் போட்டு வருமாறு அறிவுறுத்தி திருப்பி அனுப்பி வைத்தனர். மாணவர்களை மெட்டல் டிடெக்டர் கொண்டு பரிசோதனை செய்து வெள்ளி அருணாகொடி இருக்கிறதா என்ற சோதனைக்கு பிறகு தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர். மாணவிகள் காதில் உள்ள தோடுகளை கழற்றி பெற்றோரிடம் கொடுத்து விட்டு செல்லுமாறு அறிவுறுத்தியது. அடுத்து சில மாணவிகள் தங்கள் காதுகளில் அணிந்து இருந்த தோடுகளை பெற்றோரிடம் கழட்டி ஒப்படைத்தனர். தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், பாலக்கோடு உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான தங்கள் வாகனங்களில் தேர்வு எழுதக்கூடிய மாணவர்களை அழைத்து வந்ததால் தேர்வு நடைபெறும் பகுதி போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்பட்டது.

    Previous Next

    نموذج الاتصال