நெல்லை-திருச்செந்தூர் ரோட்டில் உள்ள காந்திபுரம் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோடு வேனில் கஞ்சா இருப்பதாக திருச்செந்தூர் தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சென்று லோடு வேனை சோதனை செய்தனர். அதில் 3 சாக்கு பைகளில் 120 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சா மற்றும் லோடு வேனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் உரிமையாளர் யார்?, கஞ்சா கடத்தி வந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர் அருகே தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட லோடு வேனில் இருந்த 120 கிலோ கஞ்சா பறிமுதல்
Google