No results found

    10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு- ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.39%


    2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் இன்று வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1020 அரசு பள்ளிகளில் மட்டும் அதாவது கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.39% ஆகும். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16%. வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.inமற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளங்கள் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.

    Previous Next

    نموذج الاتصال