No results found

    உடுமலை சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


    உடுமலையில் சனி பிரதோஷத்தை முன்னி ட்டு உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. உடுமலை தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவில், முத்தையா பிள்ளை லே-அவுட் சக்தி விநாயகர் கோவில், சோழீஸ்வரர் சன்னதியில் சோழீஸ்வரருக்கும், நந்தியம்பகவானுக்கும், அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பிரதோஷ மூர்த்தி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவில் பிரகாரத்தில் வீதியுலா வந்தார்.தில்லை நகர் ரத்தின லிங்கே ஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களில் அபிஷேகம் செய்து ரத்தின லிங்கேஸ்வரர் சந்தனக்காப்பு அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    எலையமுத்தூர் பிரிவு புவன கணபதி கோவிலில் உள்ள சிவன் சன்னதி, ருத்ரப்பா நகரில் உள்ள பஞ்சமுக லிங்கேஸ்வரர் கோவில், பிரசன்ன விநாயகர் கோவில், சிவன் சன்னதி, பெதப்பம்பட்டி ரோடு, ஏரிப்பாளையத்தில் உள்ள சித்தாண்டீஸ்வரர் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.குறிச்சிக்கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சிவலிங்கேஸ்வரர் சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து, அலங்கார பூஜை நடந்தது.மடத்துக்கு ளம் கடத்தூரில் அமரா வதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அர்ச்சு னேசுவரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.கொழுமத்தில் உள்ள தாண்டேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவி ல்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவன் மற்றும் நந்தியம் பகவானை தரிசனம் செய்தனர்.

    Previous Next

    نموذج الاتصال