No results found

    அருள்மிகு செளந்தரவல்லி தாயார் உடனுறை பிச்சாலீஸ்வரர் திருக்கோவில்


    திருவள்ளூர் மாவட்டம் பன்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு செளந்தரவல்லி தாயார் உடனுறை பிச்சாலீஸ்வரர் திருக்கோவில். இக்கோவில் சுமார் 800 ஆண்டுகள் பழமையானதாகும். மூன்று நிலை ராஜகோபுரம் இக்கோவில் அமைந்துள்ளது. சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்த போது அதனைக் கண்ட பகுதி மக்கள் அந்த பகுதியைக் கடப்பாரையால் தோன்றியபோது, சிவலிங்கத்தின் மீது பட்டு ஏற்பட்ட வடு இன்னும் சுயம்பு லிங்கத்தில் காணப்படுகின்றது. இக்கோவிலில் மூலவராக பிச்சாலீஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார். உற்சவராக சந்திரசேகரும், அம்பாளாக சௌந்தரவல்லி தாயாரும் மேற்கு நோக்கி காற்று தருகின்றனர்.இக்கோவிலைச் சுற்றி உள்ள உட்பிரகாரங்களின் தூண்களில் பல்வேறு கலைநயத்துடன் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

    கோவில் பிரகாரத்தைச் சுற்றி விநாயகர், வலம்புரி விநாயகர், நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, சண்டிகேசுவரர், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமாள், துர்க்கை அம்மன், நந்திகேஸ்வரர், வெள்ளிக்கிழமை அம்மன் காட்சி தருகின்றனர். இக்கோவிலில் பிரதோஷ நாட்கள், கிருத்திகை, பௌர்ணமி, ஆருத்ரா தரிசனம், கார்த்திகை தீபம், சிவராத்திரி உள்ளிட்ட நாட்கள் விசேஷ நாட்களாகப் பார்க்கப்படுகின்றது. குழந்தை வரம் வேண்டுபவர்களுக்குக் குழந்தைப் பேறு கிடைக்கும் என்றும், வீடு, நிலம் வாங்குபவர்கள் இங்கு வந்து அம்பாளையும் சிவனையும் தரிசித்தால் உடனடியாக காரியம் நிறைவேறும் எனப் பக்தர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

    Previous Next

    نموذج الاتصال