No results found

    உக்ரைனில் அணு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம்- ரஷிய அதிபர் புதினுக்கு ஜோபைடன் எச்சரிக்கை

    உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. சுமார் 7 மாதங்களாக போர் நீடித்துக் கொண்டிருக்கிறது. கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வந்தன. உக்ரைன் மீதான போரை நிறுத்தும்படி அமெரிக்கா, மேற்கத்திய நாடு விடுத்த எச்சரிக்கையை ரஷியா கண்டுகொள்ளவில்லை. இதற்கிடையே உக்ரைனின் வடகிழக்கில் ரஷிய படைகளின் வசம் இருந்த பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டது. அதேபோல் கார்கிவ் புறநகர் பகுதிகளை மீட்டது. அங்கிருந்து ரஷிய படைகள் பின்வாங்கியது. இதற்கிடையே உக்ரைனில் தீவிர தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷியா எச்சரித்து உள்ளதால் சிறிய அணு ஆயுதங்கள் அல்லது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தநிலையில் ரஷிய அதிபர் புதினுக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, "அணு ஆயுதம் அல்லது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது 2-ம் உலக போருக்கு பிறகு போரின் முகத்தை மாற்றும். எனவே வேண்டாம். இதுபோன்ற ஆயுதங்களை பயன்படுத்தினால் அமெரிக்கா தக்க விளைவுகளை கொடுக்கும். அவர்கள் (ரஷியா) என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்து என்ன பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தீர்மானிக்கப்படும்" என்று கூறினார். இந்தநிலையில் உக்ரைனில் பல பகுதிகளில் உக்ரைன் படைகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. கெர்சன், கார்கிவ், டொனெட்ஸ்க், மைகோ லேவ் பகுதிகளில் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
    Previous Next

    نموذج الاتصال