No results found

    மியான்மரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் - மத்திய மந்திரி

    மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உள்பட சுமார் 300 இந்தியர்களை விடுவித்து தாய்நாட்டிற்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், மியான்மர் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மத்திய மந்திரி முரளிதரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, மத்திய இணை மந்திரி முரளிதரன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், மியான்மரில் உள்ள இந்தியர்கள் குறித்து நமது தூதர் வினய் குமாரிடம் பேசினோம். அவர்களை பத்திரமாக மீட்பது குறித்து இந்திய தூதர் என்னிடம் விவரித்தார். மேலும் இந்தியர்களை விரைவில் விடுவிக்க அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என பதிவிட்டுள்ளார்.
    Previous Next

    نموذج الاتصال