No results found

    பொறுப்பேற்ற முதல் நாளிலேயே அதிரடி காட்டிய பிரிட்டன் புதிய பிரதமர்

    பிரிட்டனின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் லிஸ் டிரஸ் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து போரிஸ் ஜான்சன் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்து தன் பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார். அதன்பின்னர் லிஸ் டிரஸ், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்தார். அப்போது, ராணி எலிசபெத் லிஸ் டிரசை பிரதமராக நியமனம் செய்தார். பின்னர் லண்டன் திரும்பியபிறகு 3வது பெண் பிரதமரான லிஸ் டிரஸ், நாட்டு மக்களுக்கு தனது முதல் உரையை நிகழ்த்தினார். அப்போது, தனது கவனம் முழுவதையும் முக்கியமான 3 விஷயங்களில் செலுத்தவிருப்பதாக கூறினார். அதாவது தேசிய சுகதார சேவையை மேம்படுத்துவது, மக்களின் மீது உள்ள வரி சுமையை குறைப்பது மற்றும் ரஷியா இடையிலான போரினால் எழுந்திருக்கும் எரிசக்தி பிரச்சனையை சமாளிப்பது ஆகியவற்றில் மட்டுமே தற்போது கவனம் செலுத்தவிருப்பதாக குறிப்பிட்டார்.
    Previous Next

    نموذج الاتصال