No results found

    அமெரிக்காவில் இந்திய தூதருடன் கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு

    கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு சென்று தூதர் தரண்ஜித் சிங்கை சந்தித்தார். தமிழகத்தைச் சேர்ந்தவரான சுந்தர் பிச்சை முதல் முறையாக இந்திய தூதரகத்துக்கு சென்றார். அங்கு இந்திய தூதருடன், இந்தியாவில் கூகுள் நிறுவனத்தின் செயல்பாடுகள், டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது, இந்தியாவின் முன் முயற்சிகளை பாராட்டிய சுந்தர்பிச்சை, கூகுள் நிறுவனம் இந்தியாவை மிகவும் நேர்மறையான கட்டமைப்பில் பார்க்கிறது என்று தெரிவித்தார். இது தொடர்பாக சுந்தர்பிச்சை கூறும்போது, "இந்தியா மீதான கூகுளின் அர்ப்பணிப்பு குறித்து விவாதிக்க கிடைத்த வாய்ப்பை பாராட்டுகிறேன். இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்திற்கான எங்கள் ஆதரவை தொடர எதிர்பார்க்கிறோம்" என்றார். இந்திய தூதர் தரண்ஜித் சிங் கூறும்போது, "கூகுளுடன் இந்தியா- அமெரிக்க வர்த்தகம், தொழில்நுட்ப கூட்டாண்மை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது" என்றார்.
    Previous Next

    نموذج الاتصال