No results found

    அதிகரிக்கும் போக்சோ வழக்குகள்

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட போக்சோ சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் கடந்த 2021-ம் ஆண்டில் 11 மாதங்களில் மட்டும் முந்தைய ஆண்டை விட 15 சதவீதம் வழக்குகள் கூடுதலாக பதிவாகியுள்ளது.

    அங்கு 2020-ம் ஆண்டில் 2,107 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் 2021-ம் ஆண்டு நவம்பர் வரையிலான காலகட்டத்தில் 2,427 வழக்குகளே பதிவாகி இருந்தன. அதேவேளையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழங்கப்படும் தண்டனை எண்ணிக்கை பெருமளவில் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. 2019-ம் ஆண்டில் 49 பேர் தண்டிக்கப்பட்டனர். ஆனால் 2021-ம் ஆண்டு இரண்டு பேர் மட்டுமே குற்றங்களுக்கு தண்டனை பெற்றிருக்கிறார்கள்.

    2019-ம் ஆண்டை விட (2,146 வழக்குகள்) 2020-ம் ஆண்டில் (2,107) வழக்குகள் குறைந்திருந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பது கவலைக்குரிய விஷயம் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

    சமூக ஊடகங்கள் மற்றும் மொபைல் போன்களின் பயன்பாடு அதிகரிப்பதே இதற்கு காரணம் என்கிறார், அரசு வழக்கறிஞர் ஜி.வி.காயத்ரி ராஜு. “இந்த தலைமுறை சிறார்களுக்கு இலவச இணைய சேவையை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    தங்கள் மொபைல் போனில் தாங்கள் விரும்பும் எதையும் பார்க்கலாம். இன்று மொபைல் போன்கள் தகவல் தொடர்புக்கு மட்டும் பயன்படுத்தப்படவில்லை. வீடியோக்கள், படங்கள், செய்திகள் என பல விஷயங்களை பார்க்க முடியும். அவை இளம் மனதை சுபலமாக ஈர்க்கின்றன. பல சந்தர்ப்பங்களில் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் செயல்பாடுகளை கண்காணிக்க தவறிவிடுகின்றனர். வேலைக்கு செல்லும் பெற்றோர் பிள்ளைகளின் நடவடிக்கைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’’ என்றும் சொல்கிறார்.

    Previous Next

    نموذج الاتصال