No results found

    ஷாப்பிங் மேனியா… உளவியல் ஆலோசனைகள்…

    வார இறுதிநாட்கள் விடுமுறை நாட்களில் ஷாப்பிங் செல்லும் பழக்கம் பலருக்கும் உள்ளது. தேவைகளுக்கேற்ப பொருட்களை வாங்காமல் ஆர்வம், உணர்வின் உந்துதலால் பல்வேறு பொருட்களை வாங்குவது வீண் செலவாக மாறுகிறது.

    பொருளாதார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் இந்த சிக்கலுக்கு உளவியலாளர்கள் மற்றும் நிதி ஆலோசகர்கள் அளித்த ஆலோசனைகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

    எப்போதும் வரவுக்குள் செலவுகள் அடங்க வேண்டும் என்பது முக்கியம். பழக்கம் காரணமாகவோ, பின்னாளில் கிடைக்கப்போகும் பணவரவை முன்கூட்டியே எண்ணியோ, உற்சாகமாக ஷாப்பிங் செல்லும் மனநிலையை தவிர்க்க வேண்டும்.

    நண்பர்களுடன் கடைவீதிக்கு சென்று சுற்றிப்பார்க்கும் விண்டோ ஷாப்பிங் வழக்கத்தை கைவிடுவதும், கைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆன்லைன் ஷாப்பிங் செயலிகளை அகற்றி விடுவதும் நல்லது. அதன் மூலம் பொருட்களை வாங்க வேண்டும் என்ற மன உந்துதலை அளிக்கும் சூழ்நிலையை தவிர்க்கலாம்.

    கிரெடிட் கார்டு மூலம், பல்வேறு பொருட்களை வாங்கும்பழக்கம் நிறைய பேரிடம் உள்ளது. அதற்கு காரணம் குறைந்தபட்ச தொகையை முன்னதாக செலுத்தி விட்டு மீதமுள்ள தொகையை மாதாந்திர தவணையாக செலுத்திக்கொள்ளலாம் என்ற வழிமுறையாகும். இந்த விஷயத்தில் கவனமாக செயல்பட்டு அத்தியாவசியமான பொருளைத்தான் வாங்குகிறோமா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    பணம் செலுத்துவதற்கு டெபிட் கார்டை மட்டுமே பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஒரு பொருளுக்கான விலையை பணமாக கொடுக்கும் பழக்கத்தை மேற்கொள்ளலாம். அதன் மூலம் செலவு குறித்த விழப்புணர்வு நமக்குள் ஏற்படும்.

    அலமாரியில் உள்ள ஆடைவகைகளில் தேவையானதை மட்டும் உபயோகிக்க ஏற்ற வகையில் அடுக்கி வையுங்கள். இதன் மூலம் புதிய ஆடைகளுக்கான தேவை பற்றிய உணர்வு குறையும்.

    ஷாப்பிங் செல்லும் சமயங்களில் சிக்கனமாக செலவு செய்யும் இயல்புகொண்ட குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடன் செல்வதே பாதுகாப்பானது. பொருளை தேர்வு செய்து வாங்கும் அதன் அவசியம், சிக்கனம் பற்றிய அவர்களது ஆலோசனைகள் செலவுகளை கட்டுப்படுத்த உதவும்.

    ஷாப்பிங் செல்லும் உணர்வை திசை திருப்புவதற்கு, நண்பர்களுடன் போனில் பேசலாம். அதன் மூலம் ஷாப்பிங் சென்று ஏதேனும் பொருட்கள் வாங்க வேண்டும் எண்ணத்தை படிப்படியாக குறைக்கலாம்.

    ஒவ்வொரு நாளும் தூங்கச்செல்வதற்கு முன்பு அன்றைய செலவுகள் குறித்த கணக்கை ஒரு நோட்டில் குறித்து கொள்ளுங்கள். செலவு செய்யப்பட்ட காரணத்தையும் அதில் குறிப்பிட வேண்டும். மாத இறுதியில் செலவு செய்யப்பட்ட மொத்த தொகையை கண்காணிக்க வேண்டும். அவற்றில் தவிர்க்க வேண்டிய செலவுகள் எவை என்பதை அறியும் போது ஷாப்பிங் செய்வதில் கட்டுப்பாடு ஏற்படும்.

    Previous Next

    نموذج الاتصال