No results found

    வீட்டில் இருந்து அலுவலக வேலை ஏற்படுத்திய மன மாற்றம்

    கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியபோது வீட்டில் இருந்த படியே அலுவலக வேலை பார்க்கும் கலாசாரம் பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாலும், தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்திருப்பதாலும் வீட்டில் இருந்து வேலை பார்த்தவர்களில் பெரும்பாலானோர் மீண்டும் அலுவலக பணிக்கு திரும்பி இருக்கிறார்கள்.

    இருப்பினும் சிலர் வீட்டில் இருந்தபடியே அலுவலக பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த பணி அனுபவம் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், இந்தியர்களில் 3 பேரில் ஒருவருக்கு (32 சதவீதம்) அலுவலகத்திற்கு திரும்பும் எண்ணம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. 12 சதவீதம் பேர் மட்டுமே வீட்டிலிருந்து வேலை செய்வதை நிறுத்திவிட்டு பணியிடத்திற்குத் திரும்புவதற்கு ஆர்வம் காட்டி இருக்கிறார்கள்.

    இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் 39 சதவீதம் பேர் பணியிடத்திற்குத் திரும்புவதில் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் வாரத்தில் சில நாட்கள் மட்டுமே அலுவலகத்திற்கு சென்று பணி புரிந்தால் நன்றாக இருக்கும் என்பது அவர்களின் எண்ண ஓட்டமாக இருக்கிறது.

    இந்த கணக்கெடுப்பை ‘டிங்க் குளோபல் பிரிப்பெய்டு இன்டெக்ஸ்’ நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது. உலக அளவில் 6,250 பேர் கணக்கெடுப்பின்போது பதில் அளித்திருக் கிறார்கள். 52 சதவீத இந்தியர்கள் பொருளாதாரம் குறித்து நம்பிக்கையுடன் இருப்பதும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இது உலகளவிலான சராசரியை விட அதிகமாகும்.

    தங்கள் குடும்ப வருமானம் மற்றும் வேலை குறித்து நேர்மறையாக பதிலளித்த விஷயத்தில் இந்தியாதான் உலக அளவில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளது. இந்தியாவின் தடுப்பூசி முயற்சி மகத்தான நன்மைகளை கொண்டிருப்பதும் கணக்கெடுப்பின்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال